கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாவட்ட ஆட்சியர் கூறியிருந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, 19-ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இதில் 3 பேர் பெண்கள். உயிரிழந்தவர்களில் 31 பேரின் உடல்கள், நேற்று ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் நேற்று மாலையே 27 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் அறிவித்த தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக ஆட்சியர் கூறியிருந்தார். எஞ்சியுள்ளவர்களுக்கும் படிப்படியாக நிவாரணத் தொகை ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal