கலிகாலத்தில் காலத்தில், கள்ளக்காதல் அதிகரித்து வருகிறது. ‘கூடா நட்பு கேடா’ முடியும் என்பது போல, கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடியும் என தெரிந்து எதற்காக இப்படி அலைகிறார்களோ தெரியவில்லை..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருக்கு 40 வயதாகிறது. இவர் ஒரு கட்டிட தொழிலாளி. மனைவி பெயர் மணிமேகலை, இவருக்கு 35 வயதாகிறது.

ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார் மணிமேகலை. இதே ஒரகடம் பகுதியில் பானிபூரி கடை நடத்திவருகிறார் மணிகண்டன். இவர் திருப்பத்தூரை சேர்ந்தவர். மணிகண்டனுக்கு 30 வயதாகிறது. மணிமேகலையின் கணவர் ரவிக்கு மணிகண்டன் பழக்கமாகியிருக்கிறார். நாளடைவில் 2 பேருமே நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்கள். மணிகண்டனை அடிக்கடி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார். தன்னுடைய வீட்டில் சாப்பிட வைத்து அனுப்புவாராம். அந்த அளவுக்கு நட்புக்கு முக்கியத்துவம் தந்து வந்துள்ளார்.

ஆனால், மணிகண்டனுக்கும் மணிமேகலைக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் தகாத உறவாக மாறிவிட்டது. இதனால், ரவி இல்லாதபோதெல்லாம் மணிகண்டன் வீட்டுக்கு வந்து மணிமேகலையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு போனதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் இதுகுறித்து ரவிக்கு தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார். பிறகு மணிகண்டனிடம், தன்னுடைய மனைவியுடன் பேசக்கூடாது என்று, தன்னுடைய வீட்டுக்கு வரக்கூடாது என்றும் எச்சரித்திருக்கிறார்.

அப்போதும் கள்ளக்காதலர்கள் இந்த பேச்சை கேட்கவில்லையாம். அதனால், நேற்றிரவு 11 மணிக்கு, மணிகண்டன் நடத்திவரும் பானிபூரி கடைக்கு சென்று மறுபடியும் வார்னிங் தந்துள்ளார் ரவி. தன்னுடைய மனைவியுடன் தொடர்பு வைக்கக்கூடாது என்று மணிகண்டனிடம் சொல்லி வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் மெல்ல முற்றி கைகலப்பாகிவிட்டது. நண்பர்கள் இருவரும் ஒருவரையொருர் தாக்கி கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டது.. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், அவரது தம்பி கோபியின் துணையுடன், அங்கு கிடந்த பெரிய கட்டையால் ரவியை சரமாரியாக அடித்துள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் ரவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டார். இதைப்பார்த்ததுமே மணிகண்டன், கோபி இருவருமே ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்த ஒரகடம் போலீசார், விரைந்து சென்று ரவியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மணிகண்டன், கோபி இருவரையும் கைது செய்து, விசாரணையையும் நடத்தி வருகிறார்கள்!!!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal