பிளஸ் 2 தேர்வு தேர்வுகளை முடிவுகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெற்றோர்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

‘‘இந்தாண்டு பிளஸ் 2தேர்வு எழுதாத சுமார் 45 ஆயிரம் மாணவர்கள் பற்றி கலந்தாய்வு கூட்டத்தில் விவாதித்தோம். அவர்களில் அடையாளம் காணக்கூடிய மற்றும் அடையாளம் காண முடியாத மாணவர்கள் யார் யார் என்பது குறித்து கண்டுபிடித்தோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் கால்சென்டர் மூலமாக தொடர்பு கொண்டு கல்வி மற்றும் தேர்வு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அதேபோல் இன்றைக்கு ரிசல்ட்டை பார்த்துக் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக பெற்றோர்களுக்கு நான் வைக்கின்ற வேண்டுகோள், பிள்ளைகள் என்ன மார்க் எடுத்தாலும் சரி, ஊக்கப்படுத்த வேண்டியது தான் பெற்றோர்களாக இருக்கும் நம்முடைய கடமை. அதேபோல் தேர்ச்சி பெற முடியவில்லை.

மார்க் கம்மியாகிவிட்டது என்றால் அவர்களுக்கு தனித்தேர்வு உடனடியாக வைக்கப்படுகிறது. தனித்தேர்வு ஏன் வைக்கப்படுகிறது என்றால், தேர்ச்சி தேர்ச்சி பெறாதவர்களும் உடனடியாக தனித்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்று இந்த ஆண்டே உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதற்காகத்தான் தனித்தேர்வை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எனவே குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டியது உங்கள் கடமை. இந்த வயது (பிளஸ் 2 மாணவர்கள் வயது) என்பது மிகவும் சென்செட்டிவான வயது அந்த குழந்தைகளுக்கு. எனவே குழந்தைகளின் கூடவே இருந்து அவர்களுக்கு ஊக்கத்தை தருகின்றன முயற்சியில் ஈடுபட வேண்டும்.

சரி அரசாங்கத்தின் சார்பாக நாங்கள் என்ன செய்ய போகிறோம். ஒவ்வொரு பள்ளியிலும், ஏறத்தாழ 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை பொறுத்தவரை தலைமை ஆசிரியர் இருப்பார், ஆசிரியர் இருப்பார். பள்ளி நிர்வாகிகள் குழு இருக்கும். கல்வியாளர்கள் இருப்பார்கள், கருத்தாளர்கள் இருப்பார்கள். இன்றைக்கு குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது, இந்தகுழுவினரிடம் சென்று உயர்கல்விக்கான ஆலோசனை பெறலாம்.

மாணவர்களின் மார்க்கை பார்த்துவிட்டு உயர்கல்விக்கு என்ன செய்ய வேண்டும்.மாணவர்களின் விருப்பங்கள் என்னென்ன.. எந்த கல்லூரியில் சேர்ந்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று சொன்னால் , அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும். எனக்கான வழிகாட்டி யார் ? இந்த கேள்விக்கெல்லாம் இன்றைக்கு அரசு நியமித்துள்ள குழு பதில் அளிக்கும்.

கிராமத்தில் வாழும் பல பிள்ளைகளின் பெற்றோருக்கு எப்படி உயர்கல்விக்கு தங்கள் பிள்ளைகளை தயார் படுத்துவது என்று தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆசிரியர்கள் குழுவிடம் ஆலோசனை பெறலாம்’’ இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal