செந்தில் பாவாஜியின் உறவினர்கள். நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற 8 நாட்கள் சோதனையை தொடர்ந்து தற்போது அவரது கரூர் வீட்டிலும், சென்னை பட்டினப்பாக்கம் அரசு பங்களாவிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 8 நாட்கள் சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், கரூரில் உள்ள இல்லத்திலும் அமலாக்கதுறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறையினர் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் இல்லத்தில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தவில்லை. இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை நேரடியாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (கடந்த சில நாட்களுக்கு முன்பு) வருமானவரித்துறை சோதனை நடந்த நிலையில், இன்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதுதான், ஆளும் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal