பள்ளிக்கல்வித்துறை, சைபர் குற்றப்பிரிவு இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.
ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் பலரிடம் கல்வித்துறை அதிகாரிகள் என்று கூறி வாட்ஸ்அப் செயலி மூலம் ‘கியூஆர்’ குறியீட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்போது பணம் பறித்து உள்ளனர். எனவே யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.