மாடல் அழகிகளுக்கு திரைப்பட வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக விபச்சாரத்தில் தள்ளிய பாலிவுட் நடிகை கைதான சம்பவம்தான் திரையுலகை பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
பிரபல பாலிவுட் நடிகை ஆர்த்தி மிட்டல், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இரண்டு பெண்களை, விபச்சாரத்திற்கு அனுப்பியது நிரூபணம் ஆன நிலையில், போலீசார் இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கை செய்தனர். மேலும் இவர் விபச்சாரத்தில் தள்ளிய இரண்டு பெண்களை மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஆர்த்தி மிட்டல், மாடல் நடிகை என்பதை தாண்டி, காஸ்டிங் இயக்குனராக இருப்பதால்… அனைத்து பாலிவுட் பிரபலங்களுக்கும் மிகவும் பரிச்சியமானவர். தற்போது நடிகர் மாதவனுடன, திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியுள்ளதாவது, ஆர்த்தி தன்னுடன் மாடலாக பணிபுரிபவர்களை குறிவைத்து, பட வாய்ப்பு பெற்று தருவதாகவும், பண ஆசை காட்டி… விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
ஓஷிவாராவில் உள்ள ஆராதனா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆர்த்தி, இவர் தன்னுடைய வீடு மற்றும் சில இடங்களில் விபச்சார கும்பலுடன் இணைந்து, பல இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் சுதாருக்கு தகவல் கிடைத்தது. எனவே ஆர்த்தி மிட்டலை வளைத்து பிடிக்க, வாடிக்கையாளர் போல் காட்டிக்கொண்டு ஆர்த்தியை அழைத்து இரண்டு பெண்கள் விபச்சாரத்திற்கு வேண்டும் என கேட்டனர். அதற்கு ஆர்த்தி, 60,000 ரூபாய் கேட்டு, சுதாரின் மொபைலில் இரு பெண்களின் புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
மாடல்கள் ஜூஹு அல்லது கோரேகானில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குவர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, கோரேகானில் உள்ள ஹோட்டலில் இரண்டு அறைகளை பதிவு செய்த சுதர், குற்றப்பிரிவில் இருந்து இரண்டு போலி வாடிக்கையாளர்களை ஹோட்டலுக்கு அனுப்பியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆர்த்தியும் பணத்தை பெற்று கொண்டு, இரண்டு இளம் பெண்களுடன் ஹோட்டலுக்கு வருவதும், ரகசியக் காவலர்களிடம் கருத்தடை சாதனங்களை ஒப்படைப்பதும் மறைவான கேமராக்களில் பதிவாகியுள்ளன.
பின்னர் மும்பை காவல் துறையினர் நடிகை ஆர்த்தி மிட்டலை கையும் களவுமாக கைது செய்தனர். தற்போது அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370 மற்றும் மனித கடத்தலுக்கான பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விசாரணையில், ஆர்த்தி தங்களுக்கு தலா ரூ.15,000 தருவதாக உறுதியளித்ததாக, விபச்சாரத்தில் ஈடுபடுத்த பட்ட இரு இளம் மாடல்களும் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். அவர்களை போலீசார் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.