இரவில் காதலியுடன் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய காதலன், நள்ளிரவில் காதலியை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம் தான் கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கிறது.

பெங்களூர் லக்கெரே அருகே வசித்து வந்தவர் பிரசாந்த் (வயது 28). இவர் பீனியாவில் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரும் நவ்யா (26) என்பவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நவ்யாவின் சொந்த ஊர் ராமநகர் மாவட்டம் கனகபுரா.

மேலும் நவ்யாவின் தந்தை உதவி சப் – இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். நவ்யா பெங்களூர் கோரமங்களாவில் தங்கி உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில் செகன்ட் டிவிஷன் கிளர்க்காக பணியாற்றி வந்தார். நவ்யாவுக்கு கடந்த 11ம் தேதி பிறந்தநாளாகும். ஆனால் அன்றைய தினம் இருவரால் சேர்ந்து கொண்டாட முடியவில்லை.

இதனால் தாமதாமாக அதாவது நேற்று முன்தினம் நவ்யாவின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாட பிரசாந்த் முடிவு செய்தார். இதையடுத்து நவ்யாவின் பிறந்தநாளை தனது அறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அவர் செய்தார். அறையை ரிப்பன், பலூன்களால் அலங்காரம் செய்து வைத்திருந்தார். நவ்யாவும் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். பிரசாந்தும், பவ்யாவும் மாறி மாறி கேக் ஊட்டி கொண்டனர். அதன்பிறகு பிரசாந்தும், பவ்யாவும் பேசி கொண்டிருந்தனர். இந்த வேளையில் நவ்யாவுக்கு போன்கால்கள் வந்துள்ளது.

மேலும் அவர் வாட்ஸ்அப்பிலும் மெசேஜ் செய்து வந்துள்ளார். இதுபற்றி பிரசாந்த் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்கவில்லை மேலும் தான் ரீப்ரஸ் ஆக வேண்டும் என பிரசாந்திடம் கூறிவிட்டு வாஷ்ரூமுக்கு செல்போனுடன் சென்றுள்ளார். அப்போதும் கூட நவ்யா ஆன்லைனில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெளியே வந்த நவ்யாவிடம் வாட்ஸ்அப் சாட்டுகளை காட்டும்படி பிரசாந்த் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பிரசாந்த் கேக் வெட்ட பயன்படுத்திய கத்தியை எடுத்து நவ்யாவின் கழுத்தில் பலமுறை கொடூரமாக குத்தியுள்ளார். இதில் நவ்யா துடிதுடித்து இறந்தார். இதையடுத்து பிரசாந்த் கத்தி, ரத்தம் படிந்த சட்டையுடன் ராஜகோபால் நகர் போலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவத்தை கூறி ராஜகோபால் நகர் போலீசில் சரணடைந்துள்ளார்.

பிரசாந்தை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘கொலை செய்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் பவ்யாவின் உடல் அருகே பிரசாந்த் 5 மணிநேரம் அப்படியே இருந்துள்ளார். மேலும் கொலையை மறைக்கும் முயலும் வகையில் உடலை அப்புறப்படுத்த நினைத்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. இதையடுத்து அவர் போலீசில் சரணடைந்தள்ளார்’’ என்றனர். இந்த சம்பவம் பெங்களூர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal