திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெங்கடாச்சலபுரத்தில் ஆர்.எஸ்.கே. இன்டர்நேஷனல் (சி.பி.எஸ்.இ.) பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. இப்பள்ளியின் ஏழாமாண்டு ஆண்டுவிழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

துறையூர் அருகே வெங்கடாச்சல புரத்தில் ஆர்.எஸ்.கே. இன்டர்நேஷனல் பள்ளி (சி.பி.எஸ்.இ.) செயல்பட்டு வருகிறது. கிராமப் புரத்தில் மிகவும் பின் தங்கிய மானவர்களை பள்ளியில் சேர்த்து, மிகவும் கஷ்டமான சி.பி.எஸ்.இ. சிலபஸை மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும்படி மிகவும் தரமான பிரின்சிபல் மற்றும் ஆசிரியர்களை வைத்து பள்ளியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் தாளாளர் கார்த்திகேயன்!

இப்பள்ளியின் ஏழாம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பர்வீன் சுல்தானா ‘யாதும் ஊரே… யாவரும் கேளிர்..!’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏராளமான அறிவுரைகளையும், டிப்ஸ்களையும் கொடுத்தார்! மாணவர்களை பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும். மாணவர்களுக்கு மத்தியில் பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுரை வழங்கினார்.

பள்ளித்தாளாளர் கார்த்திகேயன் பேசும்போது, ‘‘எங்கள் பள்ளியில் கிராமப் புறங்களில் இருந்துதான் அதிகளவில் மாணவர்கள் வருகிறார்கள். அவர்களை சி.பி.எஸ்.இ. எனும் கஷ்டமான சிலபஸை ஆசிரியர்கள் மிகவும் எளிமையாக புரியவைத்து, அவர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டு வருகிறார்கள்.

அதே போல், நாங்கள் எல்.கே.ஜி முதல் 1&ம் வகுப்பு, 6 மற்றும் 11&ம் வகுப்பில் மட்டும்தான் மாணவர்களை இனி சேர்க்க இருக்கிறோம். இடையில் சேர்க்கமாட்டோம் என்ற முடிவிற்கு வந்திருக்கிறோம். எங்களிடம் இருக்கும் மாணவர்களுக்கு கல்வித்திறனை மேம்படுத்தினால் போதும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்’’ என்று ரத்தின சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

தனியார் பள்ளிகள் எப்படியாவது மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என்று துடித்து வரும் தாளாளர்களுக்கு மத்தியில் இப்படியொரு தாளாளரா என நாமே வியந்துபோனோம்..!

அதன் பிறகு மைக் பிடித்த அகாடமிக் டைரக்டர் எஸ்.ரவிச்சந்திரன் பேசியதுதான், பெற்றோர்களையும் மாணவர்களையும் சிந்திக்க வைத்தது. அதாவது கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கொடுத்த மரியாதை என்பது எப்படி இருந்தது. தற்போது எப்படி இருக்கிறது என்பதை மிகவும் வேதனையுடன் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதாவது, ‘‘உதாரணமாக, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு பெண்சில் காணவில்லை அல்லது மாணவர்களுக்குள் ஏற்படும் சின்ன சின்ன பிரச்னைகளைக் கூட, வீட்டில் பெற்றோரிடம் இரண்டு மடங்காக எடுத்துக் கூறி, மறு நாள் பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து வருகின்றனர்.

அப்படி அழைத்து வரும்போது, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வைத்துக்கொண்டே ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்வதோடு, கோபத்தில் தகாத வார்த்தைகளிலும் பேசிவிடுகின்றனர். இதனால், மாணவர்கள் எப்படி ஆசிரியர்கள் மீது மரியாதை வைப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்கள் கண்டிப்பதில் தவறில்லையே! அதற்காக, பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியர்களையே கண்டிப்பது எந்தவகையில் நியாயம். அந்த ஆசிரியர்கள் எந்தளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்’’ என்றார்.

உண்மையிலேயே ரவிச்சந்திரனின் கருத்து சிந்தக்க வைக்கக்கூடியது. உதாரணமாக நாம் படிக்கும் காலத்தில் , ‘கணக்கு வாத்தியார் உள்பட உடற்கல்வி ஆசிரியரிடம் கூட அடிவாங்கித்தான் படித்திருக்கிறோம். அதானல்தன் இன்றைக்கு இந்த உயரத்தில் இருக்கிறோம். தற்போதைய மாணவர்கள், தனியார் பள்ளிகளில் ‘பணம் கொடுத்து’தானே படிக்கிறோம் என்ற நினைப்பில் இதுபோன்ற தவறுகளில் ஈடுபட்டுவிடக் கூடாது. பெற்றோர்களும், மாணவர்கள் சொன்னவுடன் ஆசிரியர்களை கண்டிக்கச் செல்வது முற்றிலும் தவறான முன்னுதாரணம் என்ற உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார் அகடாமி இயக்குநர் ரவிச்சந்திரன்!

இறுதியாக ஆர்.எஸ்.கே. இன்டர்நேஷனல் பள்ளியின் மாணவர்கள் கலைத்துறையில் தங்களது முயற்சியினை மிகவும் திறம்பட வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக பள்ளி விழாவில் எந்தவொரு அரசியல் கட்சியினரையும் தாளாளர் அழைக்காமல், ‘கல்வியில் அரசியலை’ புகுத்தாமல் நடத்தியதுதான் அனைவரையும் வியக்க வைத்தது. இதே போன்று கல்வி சேவை தொடர வேண்டும்…!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal