ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு இளைஞரை வைத்து அந்தரங்க (வெப்சீரியஸ்) படம் எடுத்த பெண் இயக்குநரை கேரளாவில் போலீசார் கைது செய்த சம்பவம்தான் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி தீப்தா. இவர் மலையாள சினிமா இயக்குநராக உள்ளார். இவர் மலையாளத்தில் நான்ஸி, ஸெலின்றெ டியூசன் கிளாஸ், பால் பாயாசம் போன்ற 18+ வெப் சீரிஸ்களை இயக்கி உள்ளார். இவை அனைத்துமே அந்தரங்கம் படுக்கையறை காட்சிகள் அதிகம் நிறைந்தவை.

இந்நிலையில் திருவனந்தபுரம் வெங்கானூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் ஒருவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டிருக்கிறார். இவருக்கு எப்படியே இயக்குனர் லட்சுமி தீப்தாவினுடைய தொடர்பு கிடைத்திருக்கிறது. அப்போது லட்சுமி தீப்தா வெங்கானூர் இளைஞரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி நடிக்க வைத்திருக்கிறாராம். ஆனால் படம் நடித்துக் கொண்டிருந்தவருக்கு எடுக்கப்பட்டது ஆபாச படம் என்று பின்பு தான் தெரியவந்ததாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருவனந்தபுரம் அருவிக்கரை போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

‘‘மலையாள இயக்குநர் லட்சுமி தீப்தா என்பவரிடம் நான் சினிமாவில் நடிக்க ஆசைப்படுவதை தெரிவித்தேன். அவர் எனக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசைவார்த்தை கூறினார். இதையடுத்து சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி என்னை அருவிக்கரை பகுதிக்கு கூட்டிச் சென்றார். அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். லட்சுமி தீப்தாவின் ஆட்கள் அங்கு சிலகாட்சிகளைக் கூறி நடிக்கும்படி கூறி, அதை கேமராவில் பதிவு செய்தனர்.

பின்னர், இயக்குநர் லட்சுமி தீப்தா ஒரு ஒப்பந்ததில் கையெழுத்திட வைத்தார். அந்த ஒப்பந்தத்தை காட்டி என்னை ஆபாசமாக நடிக்க வைத்தார். தான் நடித்தது ஆபாச தொடர் என்ற உண்மையை உணர்ந்ததும், நான் விலக முயன்றேன். ஆனால் ஒப்பந்தத்தைக் காட்டி அந்த பெண் மிரட்டினார். நடிக்க மறுத்து வெளியேறினால் ஒப்பந்தத்தை மீறியதாக கூறி, இழப்பீடு தர வேண்டிய நிலை வரும் என்று அச்சுறுத்தியதால் வேறு வழியின்றி நடித்தேன். நான் நடித்த காட்சிகள் வெளியிடப்பட்டால் அது என் எதிர்காலத்தை பாதிக்கும். எனவே இயக்குனர் லட்சுமி தீப்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த இளைஞர் அருவிக்கரை போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸார் அந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் இயக்குநர் லட்சுமி தீப்தாவை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட லட்சுமி தீப்தாவை போலீஸார் நெடுமங்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை அடுத்த ஆறு வாரங்கள், புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 12 மணிவரை போலீஸ் அதிகாரி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் போலீஸ் அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை வழங்க வேண்டும் நிபந்தனையுடன் இயக்குனர் லட்சுமி தீப்தாவுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. போலீஸ் விசாரணைக்கு இன்னும் கூடுதல் நேரம் தேவைப்பட்டால், அனுமதிக்கலாம் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கூறியிருக்கிறது.

கேரளாவில் இளைஞரை ஏமாற்றி ஆபாச தொடரில் நடிக்க வைத்ததாக புகாரின் பேரில் பெண் இயக்குனர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal