மலையாளம், தமிழ், ஹிந்தி என ஆல் ரவுண்டராக கலக்கி கொண்டிருக்கும் மாளவிகா மோகனன் தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர மற்ற மொழி படங்களிலும் அவர் பிஸியாகி வருகிறார். இந்நிலையில் அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் அவர் பற்றி மிகவும் ஆபாசமாக கமெண்ட் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகன் சமீப காலமாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் பிகினி போன்ற அரைகுறை ஆடையுடன் இவர் வெளியிடும் போட்டோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன் மூலமே இவர் அதிக அளவில் பிரபலமடைந்து வருகிறார்
இந்நிலையில் அவர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கிறிஸ்டி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக 20 வயது இளம் நடிகரான மேத்யூ தாமஸ் நடித்துள்ளார். 29 வயதாகும் மாளவிகா மோகனுக்கு இவ்வளவு குறைவான வயதுள்ள நடிகர் ஜோடியா என்ற ஆச்சரியம் தற்போது கிளம்பியுள்ளது. இது குறித்து பல விமர்சனங்களும் எழுந்தது வருகிறது.
அந்த வகையில் ரசிகர் ஒருவர் இது குறித்த தன்னுடைய கருத்தை மிகவும் மோசமாக பதிவிட்டுள்ளார். அதாவது அந்த நபர் மேத்யூ உங்களை எப்படி ஹேண்டில் செய்தார் என இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக கமெண்ட் கொடுத்து இருந்தார். பொதுவாக நடிகைகள் பலருக்கும் ரசிகர்கள் தரப்பிலிருந்து இது போன்ற மோசமான கமெண்ட்டுகள் வந்து கொண்டு தான் இருக்கும். சிலர் அதை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிடுவார்கள்.
ஆனால் சில நடிகைகள் இதற்கு தக்க பதிலடியை கொடுப்பார்கள். அதே போல் தான் மாளவிகா மோகனும் தன்னை ஆபாசமாக பேசிய அந்த நபருக்கு சரியான நோஸ்கட் கொடுத்திருக்கிறார். அதாவது அவர் மேத்யூ என்னை நன்றாகவே ஹேண்டில் செய்தார் என்று பதிலளித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
ஒரு சிலர் அவருடைய கிளாமர் உடைகளை பார்த்து மோசமான கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதைத்தொடர்ந்து தங்கலான் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் மாளவிகா அதற்காக சில சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.