தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையான ஜெயசுதா 64 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது.

கடந்த 1972-ம் ஆண்டு தனது 12 வயதில் தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜெயசுதா. 1973-ம் ஆண்டு, ‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் கே.பாலசந்தர் தமிழில் ஜெயசுதாவை நடிகையாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, கே.பாலசந்தர் இயக்கத்தில் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘நான் அவனில்லை’, ‘அபூர்வ ராகங்கள்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடன் ‘பட்டிக்காட்டு ராஜா’, ‘இரு நிலவுகள்’, ‘ராசலீலா’, ‘தங்கத்திலே வைரம்’, ‘ஆயிரத்தில் ஒருத்தி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

நடிகர் ரஜினிகாந்துடன் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘பாண்டியன்’ படத்தில் அவரது சகோதரியாக நடித்தார். பின்னர், ‘ராஜநடை’, ‘அந்தி மந்தாரை’, ‘தவசி’, ‘அலைபாயுதே’, ‘தோழா’ ஆகிய படங்களிலும் நடித்தார்.

நடிகை ஜெயசுதா நிதின் கபூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நிதின் கபூர் மும்பையில் 2017 மார்ச் 14-ம் தேதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக சிலகாலம் நடிகை ஜெயசுதா நடிக்காமல் இருந்தார். இதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர், குணச்சித்திர வேடங்களில் தற்போது வரை நடித்து வருகிறார். அவருக்கென்று தனிரசிகர் பட்டாளம் உள்ளது.

திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜெயசுதாவிற்கு தற்போது 64 வயதாகிறது. தற்போது அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி பரவி வருகிறது. அவருடன் எல்லா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்பவர் பெரிய தொழிலதிபர் என்றும் அவரை ஜெயசுதா ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்க அமெரிக்கா சென்ற ஜெயசுதா, அங்கு இந்த தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த செய்தி குறித்து நடிகை ஜெயசுதா இதுவரை பதில் அளிக்கவில்லை.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal