பொதுவாக தென்னிந்திய திரைப்பட நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாத போது, ‘போட்டோ ஷூட்’ நடத்தி, ரசிகர்களை மட்டுமல்லாது நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையே கிரங்கடிப்பார்கள்!

இந்த நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் மீண்டும் கவர்ச்சி புயலாக மாறி படுகிளாமரான உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் என்கிற தேசிய விருது வென்ற திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக அழுத்தமான கேரக்டரில் நடித்தபோது கூட கிடைக்காத வரவேற்பு, ஒரே ஒரு மொட்டைமாடி போட்டோஷூட்டின் மூலம் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்தது.

சேலையில் இடையழகு தெரிய இவர் நடத்திய அந்த போட்டோஷூட் தான் வரை மிகவும் பிரபலம் ஆக்கியது. இதையடுத்து இவரைக் காப்பி அடித்து மற்ற நடிகைகளும் மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தும் அளவுக்கு ரீச் ஆகிவிட்டார் ரம்யா பாண்டியன். இதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தினார். அதில் புகழ் உடன் சேர்ந்து இவர் அடித்த லூட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது ரசிகர் வட்டத்தை பெரிதாக்கிக் கொண்டார்.போட்டோஷூட்களில் கவர்ச்சியாக தோன்றினாலும், சினிமாவில் கவர்ச்சியை அறவே தவிர்த்து வருகிறார் ரம்யா பாண்டியன். தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கடைசியாக சூர்யா தயாரிப்பில் வெளியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்கிற படத்தில் கிராமத்து பெண்ணாக வாழ்ந்திருந்தார் என சொல்லும் அளவுக்கு மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்காளை பெற்றார். தற்போது இவர் நண்பகல் நேரத்த் மயக்கம் என்கிற படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி உடன் நடித்து இருக்கிறார். இப்படம் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகி உள்ளார் ரம்யா. இப்படத்தை பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கி உள்ளார்.

இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் மீண்டும் கவர்ச்சி புயலாக மாறி படுகிளாமரான உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal