கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தாய் காட்டுப்பகுதிக்குள் சென்றதால், ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஏரியோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (31). இவரது மனைவி தூர்காதேவி(26). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடும்ப வறுமையின் காரணமாக நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் தோட்டத்தில் தாய் மாமன் பாலுடன் தங்கி குழந்தையுடன் தூர்காதேவி வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த நவம்பர் 25ம் தேதி துர்காதேவி குழந்தை திடீரென மாயமானது. பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் கிணற்றில் குழந்தை சடலமாக மிதப்பதை கண்டு தாய் அதிர்ச்சி அடைந்து அழுது கதறினர். இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதில் துர்காதேவிக்கும், தோப்புபட்டியை சேர்ந்த அஜய்க்கும் (21) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு அஜய், துர்காதேவி உல்லாசமாக இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது, குழந்தையை அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கி விட்டு சென்றதால் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அஜய், துர்காதேவியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal