அஜீத் நடித்த ‘துணிவு’ படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்திருப்பதாகவும், விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு தியேட்டர்களை ஒதுக்க உரிமையாளங்கள் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் காட்டுத்தீயாக பரவியது. இந்த நிலையில்தான் இரு படங்கள் குறித்த உண்மை நிலவரம் வெளியாகியிருக்கிறயது!
அஜித் நடித்துள்ள துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு படமும் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின் விஜய், அஜித் படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும், வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமாரும் வெளியிட உள்ளார். இதனிடையே வாரிசு படத்திற்கு அதிக அளவில் தியேட்டர்கள் ஒதுக்க முடியாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதால் அப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்கிற குழப்பம் ஒரு பக்கம் நீடித்து வருகிறது.
மறுபக்கம், துணிவு படத்திற்காக தமிழகம் முழுவதும் தியேட்டர்களை புக் செய்யும் பணிகளில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் அதிரடியாக களமிறங்கி உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. அதுமட்டுமின்றி துணிவு படத்துக்காக அதிகளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
இவ்வாறு துணிவு மற்றும் வாரிசு படங்கள் பற்றி அடுத்தடுத்து பல்வேறு விதமான தகவல்கள் பரவி வந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய பேட்டியில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி பொங்கலுக்கு ரிலீசாக உள்ள அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரு படங்களுக்கும் இதுவரை எந்த திரையரங்குகளும் ஒதுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு அதிகளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக பரவும் தகவல் உண்மையில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில், ‘துணிவு’ படத்தை நாங்கள்தான் வெளியிடப் போகிறோம்! ஆனால், ‘வாரிசு’ படம் குறித்த கேள்விக்கான பதிலை அளிக்கவில்லை. ஆனால், ‘இருவரும் மாஸ் ஹீரோவாச்சே..?’ அப்படின்னு கேட்கும்போது,
‘‘அமாம்… உண்மைதானே..?’’ என்று பதிலளித்த உதயநிதி, ‘‘இருவர் படத்தையும் நீங்கள் வாங்கி வெளியிட வாய்ப்பு இருக்கிறதா?’ என்ற கேள்விக்கு, ‘இதிலென்ன பிரச்னை… தமிழகம் முழுவதும் 1300 தியேட்டர்கள் இருக்கிறது. இரண்டாக பிரித்துக்கொடுத்தால் போச்சு…’’ என்று அசால்டாக பதில் அளித்தார்.
தற்போது திருப்பூர் சுப்பிரமணியம் கூறிய பதிலால் மீண்டும், ‘இரு மாஸ் ஹீரோக்களின்’ ரசிர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.