‘அரசு பள்ளிகளில் படிப்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்’ என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான், அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து படிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஏராளமான புதிய திட்டங்களை புகுத்தி செயல்படுத்தி வந்தார் அமைச்சர்.

இதற்கிடையே இன்று அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்தின் வழியாக எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக ‘கூகுள் ரீட் அலாங்’ என்ற செயலியை பயன்படுத்துவதற்கென பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இது அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் பேச வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal