தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் ஒரே வழி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும். அப்போதுதான் நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என விஜய்க்கு தற்போது ஆலோசனை கூறியிருப்பதாகவும், விஜய்யும் இதுபற்றி யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இன்றை தினம் பதவியேற்பதற்காக நேற்று ஆளுநரை சந்தித்தார் விஜய். ஆனால், ஆளுநர் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இல்லாததால் விஜய்யை பதவியேற்க அழைக்கவில்லை. இதனால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில்தான் இன்றைய தினமும் தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்தார் விஜய். அப்போது விஜய்யிடம் ஆளுநர், ‘நீங்கள் பெரும்பான்மையை காட்டினால் மட்டுமே ஆட்சியமைக்க அழைக்க முடியும். சட்டமன்றத்தில் மட்டும் எப்படி பெரும்பான்மையை நிரூபிப்பீர்கள். தற்போதைக்கு உங்களிடம் ஆட்சியமைக்கும் அளவுக்கு போதிய பலம் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் ஆட்சியமைத்தால் மக்களுக்கு நிலையான ஆட்சியை கொடுக்க முடியாது என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.

தமிழக ஆளுநர் மாளிகை தரப்பே விஜய்யிடம் பேசியது தொடர்பாகவும் அறிக்கையே வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் விஜய் ஆட்சியமைக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க.வின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என்பதால், எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே இன்று மாலை 3.30 மணிக்கு தமிழக ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal