பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால், தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கவேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் வரும் மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில் தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.. நாளை மறுநாள் முதல் பொதுத்தேர்வு தொடங் உள்ள நிலையில் மண்டல தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றறிக்கையில், தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மின்தடை ஏற்பட்டால் மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகேயுள்ள மின்மாற்றி பழுதடைந்தால் உடனே மாற்றவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal