தூத்துக்குடி மாநகராட்சி மண்டல தலைவர் தேர்தலில், தி.மு.க., தலைமை அறிவித்த வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டதால், அமைச்சர்கள் கீதாஜீவன், – அனிதா ராதாகிருஷ்ணன் இடையேயான கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சமானது.

தூத்துக்குடி மாநகராட்சியின் நான்கு மண்டலங்களுக்கான தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. வடக்கு மண்டல தலைவராக நிர்மல்ராஜ், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி போட்டியின்றி தேர்வாகினர். மேற்கு மண்டலத்திற்கு கட்சி வேட்பாளராக கனகராஜ் அறிவிக்கப்பட்டார். ஆனால், அமைச்சர் கீதாஜீவனின் ஆதரவாளர் அன்னலட்சுமி போட்டியிட்டு, தலைமை அறிவித்த வேட்பாளரை தோற்கடித்தார்.

தெற்கு மண்டல தலைவராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான சுயம்புவை, தலைமை அறிவித்தது. அங்கும், கீதாஜீவன் ஆதரவாளர் பாலகுருசாமி போட்டியிட்டு, சுயம்புவை தோற்கடித்தார்.

தூத்துக்குடி மாவட்ட செயலர்களாக உள்ள அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் இடையே கோஷ்டி பூசல் நிலவுகிறது. நேற்றைய மண்டல தலைவர் தேர்தலில், பூசல் அம்பலமானது. கட்சி குளறுபடியை எதிர்த்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal