கடந்த சில தினங்களுக்கு முன்புதா, கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி இருக்கிறது என்ற தகவல் வயிற்றில் பாலை வார்த்தது. இந்த நிலையில்தான், உலகில் பல நாடுகளில் கொரோனா எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்குதல் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலகமே லாக்டவுனில் சென்றாலும், பல இழப்புகளை கொரோனா ஏற்படுத்தி இருக்கிறது.கொரோனா பல உருமாற்றங்களைக் கண்டு, டெல்டா, ஒமிக்ரான் என பல பெயரில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் அதிக அளவில் ஒமிக்ரான் பரவி தாக்கத்தை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37. 29 கோடியாக‌உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44.05 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 44,05,53,009 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37,29,87,959 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 59,92,483 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 6,15,72,567 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 75,966 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 6,915 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதே எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 7,554 ஆக அதிகரித்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் அகர்வால் கூறுகையில், ”உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல பெரிய நாடுகளிலும் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.

உலகில் தினமும் சுமார் 15,00,000 வழக்குகள் பதிவாகின்றன. இதனால் மீண்டும் கொரோனா அலை உச்சத்தை தொடும்” என்று தெரிவித்துள்ளார்.

உலகம் உழுவதும் தற்போது தான் கொரோனாவின் மூன்றாவது அலை ஓய்ந்தது. ஒமிக்ரானுடன் கொரோனா முடியாது என வல்லுனர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். ஒமிக்ரானிலும் பல உருமாறிய தொற்றுகள் கண்டறியப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal