கர்நாடக மாநிலத்தின் ஹசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அமைச்சராக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனாகும். மேலும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான குமாரசாமி இவருக்கு சித்தப்பாவாகும்.

நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய சம்பவத்தை செய்து தற்போது தலைமறைவாக இருக்கிறார் ரேவண்ணா. சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருக்கமாக இருந்த ரேவண்ணாவின் 3000த்திற்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பூதாகரமானதும் குற்றவாளியான ரேவண்ணா நாட்டில் இருந்து தப்பி ஜெர்மனியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்த தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்து இருக்கிறது. இருப்பினும் திருட்டு விசா மூலம் அவர் தப்பி இருக்கலாம் என விசாரணை நடந்து வருகிறது. நாட்டையே உலுக்கிய ரேவண்ணாவின் இந்த குற்றச்சம்பவத்தினால் அவரை கட்சியில் இருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது.

இந்நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார் ராகுல் காந்தி. அதில்,    ” ஹசன் நாடாளுமன்ற உறுப்பினரின் கொடூரமான பாலியல் வன்முறை குறித்து உங்களுக்கு எழுதுகிறேன். பிரஜ்வல் ரேவண்ணா பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு இல்லாமல் அதனை படம் பிடித்து இருந்திருக்கிறார். அவரை அண்ணனாகவும் மகனாகவும் பார்த்த பலர் மிகக் கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தப்பட்டு அவர்களின் கண்ணியத்தைப் பறித்தார்.

நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கடுமையான தண்டனை அளிக்கப்படவேண்டும்.. டிசம்பர் 2023ல் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வன்முறை வரலாறு மற்றும் அதனை படம்பிடித்த வீடியோக்கள் குறித்து, தேவராஜா கவுடா நமது உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனாலும், அது கண்டுக்கொல்லப்படவில்லை..

இந்தக் கொடூரமான குற்றச்சாட்டுகள் பாஜகவின் மூத்த தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், பிரதமர் ஒரு வெகுஜன பலாத்கார குற்றவாளிக்காக பிரச்சாரம் செய்ததுதான் அதிர்ச்சியூட்டும் விஷயமாக இருக்கிறது. மேலும், மத்திய அரசு வேண்டுமென்றே அவரை இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல அனுமதித்து இருக்கிறது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஆசியுடன் பிரஜ்வல் ரேவண்ணா தப்பித்திருக்கிறார் என்பது கண்டனத்திற்கு உரியது.

எனது இருபது வருட பொது வாழ்வில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொண்டு தொடர்ந்து மௌனத்தைத் தேர்ந்தெடுத்த ஒரு மூத்த பொதுப் பிரதிநிதியை (பிரதமர்) நான் சந்தித்ததில்லை. ஹரியானாவில் உள்ள மல்யுத்த வீரர்கள் முதல் மணிப்பூரில் உள்ள சகோதரிகள் வரை, இதுபோன்ற குற்றவாளிகளுக்கு பிரதமரின் மறைமுக ஆதரவின் சுமையை இந்தியப் பெண்கள் சுமந்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் நீதிக்காகப் போராடும் நமது இரக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் தகுதியானவர்கள். இந்த கொடூரமான குற்றங்களுக்கு காரணமான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கூட்டு கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது” என அக்கடிதத்தில் ராகுல் காந்தி குறிபிட்டு இருக்கிறார்..

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal