கடந்த 2 நாட்களாக காணாமல் போனதாக குடும்பத்தினரால் புகார் அளிக்கப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இன்று உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மர்மமான முறையில் ஜெயக்குமார் தனசிங் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், ஒரு வாரத்திற்கு முன்பே “மரண வாக்குமூலம்” என எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2 நாட்களாக காணாமல் போனதாக குடும்பத்தினரால் புகாரளிக்கப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இன்று உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மர்மமான முறையில் ஜெயக்குமார் தனசிங் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, கடந்த வாரத்துக்கு முன்பே தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், முன் விரோதம் காரணமாக தன்னை கொலை செய்ய பலர் நோட்டமிடுவதாகவும் கூறி ஜெயக்குமார் தனசிங் கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்து இருக்கிறார். மரண வாக்குமூலம் என்ற பெயரில் அந்த கடிதத்தில் ஜெயக்குமார் தனசிங் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த கடிதத்தை நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுக்க ஜெயக்குமார் திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதுவரை அந்த புகார் கடிதம் தன்னிடம் கொடுக்கப்படவில்லை என்று நெல்லை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மரண வாக்கு மூலம் என கடிதம் எழுதியுள்ள ஜெயக்குமார் அந்தக் கடிதத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- நாடாளுமன்ற தேர்தலின் போது கட்சி பணிகளை தீவிரமாக ஜெயக்குமார் மேற்கொண்டு வந்துள்ளார். தேர்தலின் போது பல லட்சம் செலவு செய்து வந்ததாகவும் பல்வேறு இடங்களில் பணம் வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், மரண வாக்குமூலம் எனக் குறிப்பிட்டு மிரட்டல் விடுத்த நபர்களின் பெயர்கள், தொலபேசி எண்கள் ஆகியவற்றையும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்காக பல லட்சங்களை செலவு செய்ததற்காக, அரசு ஒப்பந்தங்களை பெற்று தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் வாக்குறுதி கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பல லட்சங்களை செலவு செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.