வேலைவாய்ப்பு வழங்குவதில், அந்தந்த மாநிலங்கள் உள்ளூர் நபர்களை 75 சதவீதம் சேர்த்துக்கொண்டு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றின்போது இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலங்களுக்கு சென்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சிக்கல் ஏற்பட்டது.

மேலும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், பல மாநிலங்களில் தனியார் நிறுவனங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகரித்து வருகிறது.

உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் தனியார் நிறுவனங்களில் 75 சதவீத நபர்களை உள்ளூர் நபர்களை மட்டுமே வேலையில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

அரியானா மாநிலம், அந்த மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபர்களை 75 சதவீதம் வேலையில் அமர்த்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

அரியானா மாநில உயர்நீதிமன்றமும் இதை வலியுறுத்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, அரியானா மாநில உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். மேலும், முதலாளிகளுக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal