கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திறப்பது குறித்து அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

கொரோனா தொற்றின் 3-வது அலை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தினசரி பாதிப்பு இன்னும் 30 ஆயிரத்திற்கும் கீழ் குறையாமல் இருப்பதால் ஆன்-லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், நேரடி வகுப்புகள் நடைபெறுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘‘பிப்ரவரி மாதத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

By admin