காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது மல்லியாகர்ஜூன கார்கே கூறியதாவது:- ரெயில்வே, சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை
செய்கிறார்கள். மோடி, அமித்ஷா ஆகிய இருவரும் விற்பனையாளர்கள். அப்படி என்றால் வாங்குபவர்கள் யார்? அதானி, அம்பானி ஆகிய இருவரும்  வாங்குபவர்கள்.

பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து, அதை பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளார். 16 லட்சம் கோடி ரூபாயை கோடீஸ்வரர்களுக்காக தள்ளுபடி செய்துள்ளார் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal