‘‘ஆந்திர துணை முதல்வர் முருக பக்தர் பவன் கல்யாண் சென்னை கொளத்தூரில் பிரச்சாரம் செய்து திமுக தலைவர் ஸ்டாலினை வீழ்த்துவார்’’ என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியிருக்கிறார்.

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வெற்றி பெற முடியுமா? பவன் கல்யாண் வெற்றி பெற்ற பின் என்ன வேண்டுமானாலும் அவர் பேசட்டும். நாங்கள் கேட்கிறோம் என்று அறமற்ற துறையின் அமைச்சர் சேகர்பாபு முதல்ல ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் 2011 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாமல், வெற்றி பெற்ற தேர்தல் சரணாகதி வரலாற்றை மறந்து பேசுகிறார்.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் 68,677 ( 48.35%) வாக்குகள் பெற்று 2734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது எப்படி என்பதை அன்றைய அதிமுக மாவட்ட செயலாளர் சேகர் பாபு மறந்துவிட்டார். முதல்வர் ஸ்டாலின் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட அன்றைய அதிமுக சட்டமன்ற வேட்பாளர் சைதை துரைசாமி 65, 943 ( 46.43%) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட இருந்தவர், தோற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்ட வரலாறு மறந்துவிட்டு இன்றைய திமுக மாவட்ட செயலாளர் சேகர்பாபு வெட்டியாக வாய் சவால் விடுகிறார்.
பவன் கல்யாண் சென்னையில் போட்டியிடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் மாவட்ட செயலாளராக இருக்கும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், உங்கள் தலைவன் ஸ்டாலின் அவர்களை வெற்றி பெற வைக்க முடியுமா என்பதை மட்டும் சிந்தித்து அரசியல் செய்யுங்கள். அறமற்ற துறையின் அமைச்சர் சேகர்பாபு அவர்களே உங்கள் ஊழல் பாவகரங்களால், திமுக ஆட்சியில் மக்களிடம் கொள்ளையடித்த ஊழல் பணத்தை எல்லாம் கொட்டி கொட்டி கொடுத்து கொளத்தூர் தொகுதி ஏழை மக்களை இந்த முறையும் விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்க வேண்டாம். இந்த முறை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவிற்கு தோல்வி நிச்சயம். அதையெல்லாம் மறந்துவிட்டு முழு பக்தர் மாநாட்டில் ஆன்மீக அரசியல் பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணக்கு சவால் விடுவது வேடிக்கையாக இருக்கிறது.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் அவர்களை எதிர்த்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு சாதாரண தொண்டர் போட்டியிட்டு வெற்றி பெறப் போகிறார். தமிழக பாஜக மாநில தலைவர் நாகேந்திரன் ஊழல் திமுகவை வீட்டுக்கு அனுப்பும் முதல் தொகுதியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். ஆந்திர துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் பிரச்சாரம் முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தப் போகிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சொன்னது போல் எம்ஜிஆர், ஜெயலலிதா, தமிழகத்தின் தீய சக்தி திமுகவை விரட்டி விரட்டி வீழ்த்தியது போல வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில், அரசியல் சாணக்கியர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஒருங்கிணைப்பில், தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக பாஜக மாநில தலைவர் நாகேந்திரன் ஊழல் திமுகவை வீட்டுக்கு அனுப்பும் முதல் தொகுதியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தோல்வியை தழுவுவார்.
மதுரை முருக பக்தர் மாநாட்டில் பவன் கல்யாண் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பதில் சொல்ல வேண்டும். அதை விடுத்து “சொம்பு அரசியல்” செய்யும் அமைச்சர்சேகர் பாபுவை வைத்து சென்னையில் பவன் கல்யாண் தேர்தலில் நிற்க முடியுமா? நின்று வெற்றி பெற முடியுமா? என்று சூழ்நிலை புரியாமல், வெட்கப்படாமல் கேள்வி கேட்பது திமுகவின் பதற்றத்தையும் பயத்தையும் காட்டுகிறது. ஆந்திர துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாண் சென்னையில் தேர்தலில் நிற்பதற்கு முன், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தாலே முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற முடியாது என்பதுதான் எதார்த்த உண்மை என்பதை அமைச்சர் சேகர்பாபு புரிந்து கொள்ள வேண்டும்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 11.24 சதவீதம், அதாவது 48 லட்சத்து 80 ஆயிரத்து 954 வாக்குகளைப் பெற்று, திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. தற்பொழுது மக்கள் விரோதி தீய சக்தி ஊழல் திமுகவை அழிக்க, வாரிசு அரசியலை ஒழிக்க அரசியல் சாணக்கியர் அமித்ஷா அவர்கள் இரண்டாவது பெரிய கட்சி அண்ணா திமுகவையும் மூன்றாவது பெரிய கட்சி தமிழக பாஜகவையும் இணைத்து ஒரு வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது பலரின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.
தொடர்ந்து இந்து மதத்தை இகழ்ந்தும், இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தியும், இந்துக்களை சாதி இன மொழி வாரியாக பிரிவினைவாதம் செய்தும், குறிப்பாக இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் இந்து கோவில்களை கொள்ளை அடித்து உண்டியல்களை சூறையாடி, அரசியல் செய்து ஈன பிழைப்பு நடத்தும் தீய சக்தி திமுக ஆட்சியில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்று முருக பக்தர்கள் அனைவரும் மதுரையில் கூடி கந்த சஷ்டி கவசம் சொல்லி எழுச்சியுடன் பிரார்த்தனை செய்தது அனைவருக்கும் பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முருகன் மாநாட்டின் மகத்தான வெற்றி,நீதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் என ஒவ்வொருவரும் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்து வருவதிலிருந்து அவர்களின் பயத்தை உணர முடிகிறது.
தெலுங்கை தாய்மொழியாக கொண்டாலும், சென்னையில் வளர்ந்த தமிழ் மகன் நடிகர் பவன் கல்யாண் தெளிவான தமிழில் முருக பக்தர்கள் மாநாட்டில் ஆன்மீகத்தை காக்கும் அற்புத மக்களாக முருக பக்தர்கள் விளங்க வேண்டும். தமிழகம் தீய சக்தியில் கைப்பிடியில் இருந்து விலக வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது ,போலி திராவிட மாடல் மக்கள் விரோத அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதன் விளைவாக பவன் கல்யாண் சென்னையில் நின்று வென்று வென்று காட்ட முடியுமா? என்று திமுக அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்புகிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முதல்வர் அவர்களின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2024 பாராளுமன்ற தேர்தலில், 2021 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக பெற்ற வாக்குகளை விட பத்தாயிரத்து ஐநூறு வாக்குகள் குறைவாக பெற்றது ஏன்? என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம் சொல்வாரா?
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆறு வட்டங்களிலும், “அறநிலைத்துறை அமைச்சரா? இல்லை மளிகை கடை மேனேஜரா? ” என்று மக்கள் அனைவரும் சிந்திக்கும் அளவிற்கு திமுக கட்சியின் மக்கள் நலத் திட்டங்கள் என்று புனைப் பெயரால் ஊழல் பணத்தில் ஏழை பல்லாயிரக்கணக்கானமக்களுக்கு மளிகை சாமான் கொடுத்து ஏமாற்றியும் வாக்குகள் வராமல் போனது ஏன்? என்பதை அமைச்சர் சேகர்பாபு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எனவே திமுகவும் திமுக கூட்டணி கட்சிகளும் முருக பக்தர் மாநாட்டை விமர்சிப்பதை விட்டு பவன் கல்யாண் மற்றும் இந்து முன்னணி மீதும் அவதூறு பிரச்சாரங்களை செய்வதை விட்டுவிட்டு திருந்தி வாழ அனுதினமும் முருகரைக் கும்பிட்டு கந்த சஷ்டி பாராயணம் செய்த நல்ல தமிழ் குடிமகனாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.