தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
நடிகர் விஜய் நடிக்கும் இறுதிப்படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு முடிந்த நிலையில், டப்பிங் வேலைகளும் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ள நிலையில், மக்களை நேரடியாக சந்தித்து த.வெ.க.விற்கு ஆதரவு திரட்ட இருக்கிறார்.
அதாவது, முக்கியமான கட்சிகள் எதுவும் த.வெ.க.வுடன் கூட்டணிக்கு முன்வராத நிலையில், தமிழகம் முழுவதிலும் தனக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்க இருக்கிறார் விஜய்.
தமிழக மக்களுக்கு இனிதான் சுதந்திரம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தனது சுற்றுப்பயணத்தை நடிகர் விஜய் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. எனினும், அதிகாரப் பூர்வமாக அடுத்த மாதம் விஜய் அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சுற்றுப்பயணத்திற்குப் பிறகு தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்!