சமீபத்தில்தான் தி.மு.க. தலைமை விழுப்புரம், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் புதிய மா.செ.க்களை அறிவித்தது.
இந்த நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.எஸ்.மூர்த்தியை நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அடுத்தது, மலைக்கோட்டை மாவட்ட தி.மு.க.விலும் மாற்றம் இருக்கும் என்கிறார்கள்..!