‘‘தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் கட்டிடங்கள் மோசமாக உள்ளது.நடவடிக்கை எடுக்காமல் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் ஸ்டாலின் அரசு உள்ளது’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டியிருக்கிறார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில்,மதுரை மாநகர் முத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன், பாக்கியலெட்சுமி தம்பதியினரின் இளைய மகனான அகிலன் (10) 5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த சிலதினங்களுக்கு முன்பு கபிலன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தொடக்கப்பள்ளியில் மொட்டை மாடியில் சிறிய அளவிலான பாதுகாப்பு சுவர் ‘பாதுகாப்பற்ற’ உள்ள நிலையில், அந்தமாணவன் கீழே விழுந்தான். இதில் மயக்க நிலையில் இருந்த அகிலனை ஆசிரியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் கபிலனை அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயளாலர் டாக்டர் பா. சரவணன் சந்தித்து சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்து அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன், ‘‘தமிழகத்தில் 58,891 பள்ளிகள் உள்ளது, இதில் தமிழக அரசின் சார்பில் 24,130 தொடக்கப் பள்ளிகளும், 7024 நடுநிலைப் பள்ளிகளும்,3145 உயர்நிலைப் பள்ளிகளும், 3110 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது, ஆகமொத்தம் அரசின் சார்பில் 37,579 பள்ளிகள் உள்ளது.

அதுமட்டுமல்ல அரசு உதவி பெறும் பள்ளிகள் 8,328 உள்ளது, தனியார் பள்ளிகள் 12,382 உள்ளது, அரசு பள்ளிகளில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 77 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர், தனியார் பள்ளிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அதில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகாலம் ஆசிரியர் பணிகளை சரி நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

மேலும் இந்த 37,579 அரசு பள்ளிகளில் 8,000 பள்ளி கட்டிடங்கள் மிகவும் மோசமாக உள்ளது.குறிப்பாக 2021 டிசம்பர் மாதம் நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து மூன்று மாணவர்கள் பலியானார்கள்.

பள்ளிகளில் மோசமான கட்டிடம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு வந்த பொழுது, அரசின் தரப்பில் 5,583 பள்ளி கட்டிடங்கள் மிகவும் மோசமாக இருப்பதாகஅரசின் சார்பில் தெரிவித்து ,இதை நாங்கள் சரி செய்வோம் என்று உறுதி அளித்தனர், இதுவரை எத்தனை பள்ளிகளை சரி செய்தார்கள் என்ற புள்ளி விபரம்வெளியிடப்படவில்லை 37,579 பள்ளிகளுக்கு 3758 கோடியை ஒதுக்கினால் சீர் செய்து விடலாம்

தற்போது மழைக்காலங்கள் என்பதால் பல்வேறு பள்ளிகளில் சுவர்கள் விரிசல் விட்டும், மேல் பூச்சு கீழே விழுந்து வருவதாக பல்வேறு செய்திகள் வெளிவருகிறது. ஆகவே ஸ்டாலின் அரசு எந்த நடவடிக்கை எடுக்காமல் ஆழ்ந்த நித்திரையில் உள்ளது.ஆகவே வருங்கால தூண்களான மாணவர்கள் நலனை எண்ணி போர்க்கால அடிப்படையில் உடனடியாக பள்ளிக்கூட கட்டிடங்களை ஆய்வு செய்து சீர் செய்ய வேண்டும் இல்லையென்றால் மாணவர்கள் உயிருக்கு ஸ்டாலின் அரசு தான் பொறுப்பு’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal