கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டி கமலாத்தாளுக்கு அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலு மணி தனது சொந்த செலவில் 2 சென்ட் இடம் வாங்கி கொடுத் துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள் (95). இவர் பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். லாப நோக்கு இல்லாமல் இட்லி வழங்கும் பாட்டியின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக கொறடாவும், முன்னாள் அமைச்ச ருமான எஸ்.பி.வேலுமணி, கமலாத்தாளின் நேர்மையையும், சேவையையும் பாராட்டும் விதமாக அவரது வீட்டின் அருகில் இரண்டு சென்ட் இடம் வாங்கி அவரது பெயருக்கு பத்திரப்பதிவு செய்தார். இதையடுத்து 2 சென்ட் இடத்தின் பத்திரத்தை பாட்டி கமலாத்தாளிடம் எஸ்.பி.வேலுமணி நேற்று ஒப்படைத்தார்.