ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது ஓபிஎஸ் அணியின் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருபவருமான வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

2011 –& 2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்க அவர் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அதில் ரூ.26.90 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டப்பட்டிருந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில்தான் அடுத்ததாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ‘மணி’யானவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள். காரணம், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ‘மாஜி’க்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைதான் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

சமீபத்தில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறது. பழனிமாணிக்கமே எதிர்பார்க்க அளவில் தி.மு.க. தலைமை அவரை கௌரவித்திருக்கிறது. காரணம், வருகிற சட்டமன்றத் தேர்தலில் டெல்லிவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெல்ல வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறாராம்.

அதனால்தான், டெல்டாவில் ஓரளவு செல்வாக்காக இருக்கும் வைத்திலிங்கம் குறி வைத்து தூக்கப்பட்டிருக்கிறார். இவர் கைதானலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். ஏனென்றால் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அந்தளவிற்கு ஆதாரங்கள் இருக்கிறதாம். ஏற்கனவே டெல்டாவில் முக்குலத்தோர் வாக்குகளை இழந்து அ.தி.மு.க. பலவீனப்பட்டிருக்கும் நிலையில், பழனி மாணிக்கம் மீண்டும் லைம் லைட்டில் வந்திருப்பது தி.மு.க.விற்கு பலமாக பார்க்கப்படுகிறது.

தவிர, எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். ஆனால், வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்ததற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவிக்காதது, வைத்திலிங்கம் ஆதரவாளர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

வைத்திலிங்கத்தை ஓ.பன்னீர் செல்வம் கைவிட்டுவிட்டாரா? அல்லது கடந்த ஆட்சியில் வீட்டு வசதித்துறையை வைத்திருந்த ஓ.பன்னீர் மீதும் புகார்கள் இருப்பதால் மௌமாக இருக்கிறாரா என கேள்வி எழுந்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal