‘‘நான் முதல்வன் திட்டத்தை பெருமையாக கூறும் தி.மு.க. அரசு அரசு அந்ததிட்டத்தின் மூலம் நீட் தேர்வுக்கு தீர்வு காண முடியுமா?’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் பா.சரவணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு, தொடர்ந்து விபத்தில் கை,கால்களை இழந்தவர்களுக்கு கழக மருத்துவரணி சார்பில் இலவசமாக கழக மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா. சரவணன் செயற்கையான கால், கைகளை வழங்கி வருகிறார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

‘‘நான் முதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் தமிழகத்தின் உயிர் கல்வி சேர்க்கை உயர்ந்து உள்ளது என்று விடியா திமுக அரசு தம்பட்டம் அடித்து வருகிறது. தமிழகத்தின் உயர் கல்வி சேர்க்கைக்கு அம்மாவின் அரசு தொலைநோக்கு திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்களை வழங்கியதின் மூலம் தான் உயர்ந்து இருக்கிறது இதையாரும் மறுக்க முடியாது.

கடந்த பத்தாண்டு கால அம்மாவின் ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள் 21 பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 5 கால்நடை கல்லூரிகள், 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 248 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டது. அது மட்டுமல்லாது 117 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது, 1079 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்தப்பட்டது, 604 மேல்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தப்பட்டது.

அது மட்டுமல்லாது 52 லட்சம் மாணவர்களுக்கு 7322 கோடி மதிப்பில் மடிக்கணினி வழங்கப்பட்டது .அதேபோல் 10 ஆண்டுகளில் 60 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் 9.69 லட்சம் மாணவர்களுக்கு 2 ஜி டேட்டா வழங்கப்பட்டது. 2020 -21 ஆண்டுகாலங்களில் கொரோனா காலத்தில் மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கினார். அதன் மூலம் எடப்பாடியாரை மாணவர்கள் ஆல் பாஸ் முதல்வர் என்று புகழாரம் சூட்டினர்

நீட் தேர்வை கொண்டு வந்து திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுதான், அதனை தொடர்ந்து நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட போது அதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் கனவை நனவாக்க 7.5 சகவீத இட ஒதுக்கீட்டை எடப்பாடியார் கொண்டு வந்தார் இதன் மூலம் ஆண்டுதோறும 625 மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலமும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலமும் உயர் கல்வி சேர்க்கை உயர்ந்து விட்டதாக அரசு தம்பட்டம் அடித்து வருகிறது. நான் அரசுக்கு சவால் விடுகிறேன் இது 2011 ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் உயர் கல்வி சேர்க்கை இந்திய அளவில் தமிழகம் 25 சதவீதம் இருந்தது. ஆனால் புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் தொலைநோக்கு திட்டத்தின் மூலம் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது அதன் மூலம் 2021 ஆண்டிலேயே இந்திய அளவில் 51 சகவீதமாக உயர்கல்வி சேர்க்கை அதிகரித்து கல்வியில் புரட்சி படைத்தார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார். அதனை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு கோடி கையெழுத்து வாங்கி அதை திமுக இளைஞரணி மாநாட்டில் குப்பையில் கொட்டினார்.
இந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் நீட் தேர்வு எதிர்கொள்ளாமல் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நான் முதல்வன் என்ற திட்டத்தை புகழ்ந்து பேசும் திமுக அரசு ,நீட் தேர்வுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தீர்வு காண முடியுமா? அதேபோல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் வாங்கிய கல்வி கடனை ரத்து செய்வோம் என்று கூறினார்கள் இதுவரை எத்தனை மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து செய்தார்கள் என்று கூற முடியுமா?

ஏற்கனவே எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை தங்கள் கொண்டு வருவதாக ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டும் விடியா திமுக அரசு, தற்போது எடப்பாடியார் தன் உழைப்பின் மூலம் இந்திய அளவில் தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரித்து வந்ததை, தொடர்ந்து பின்பற்றி தங்கள் செய்வது போல ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாமா?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal