வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி, சின்னத் திரையாக இருந்தாலும் சரி, நடிகைகள் தங்களுக்கு எப்போதோ ஏற்பட்ட ‘பகீர்’ அனுபவத்தை ‘திடீரென்று’ கூறி பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அந்தவகையில் பிரபல சீரியல் நடிகையை குடிகாரன் ஒருவன் ‘ரேட்’ கேட்டதாக தற்போது ‘பகீர்’ தகவலை உடைத்திருக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியல் சமீபத்தில் இணைந்தவர் தான் விஜே காயத்ரி. இவர் இந்த சீரியலில் குணசேகரனின் தங்கையான ஆதிரையை திருமணம் செய்துள்ள கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதில் முக்கியமான ரோலில் நடித்திருந்த காயத்ரி, குடும்ப கௌரவத்தை ஏன்டா பெண்களின் காலுக்கு அடியில் தேடுறீங்க என்று அழுத்தமான வசனத்தை பேசி கைத்தட்டலை பெற்றார். அயலி தொடரில் வருவது போல போல்டான பெண்ணான காயத்ரி அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
அதில், ‘‘கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்தார். நிகழ்ச்சி ஒன்றுக்காக வெளியூர் சென்றிருந்தேன் அப்போது, குடி போதையில் ஒருவர் என்னை பின் தொடர்ந்து ஓட்டல் ரூம் வரைக்கும் வந்து, ரேட் என்ன சொல்லு என்றார். நான் கல்லூரி மாணவி என்று சொல்லியும், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் சத்தம் போட்டு கத்தினேன். பின் பக்கத்து அறையில் இருந்தவர்கள் அந்த குடிகாரரை மிரட்டி அனுப்பினார்கள். இந்த மோசமான அனுபவத்தை நான் என்றைக்கும் மறக்கவே மாட்டேன்’’ என்றார்.
அனுபவம்தானே வாழ்க்கை….?