லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ‘லியோ’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சென்னை, கோயம்பத்தூர், மதுரை போன்ற மாவட்டங்களில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal