பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார். கங்கனா ரனாவத் கடந்த 2014-ல் வெளியான ரிவால்வர் ராணி என்ற படத்தில் வீர் தாசுடன் நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது உதட்டு முத்த காட்சியில் கங்கனா வீர் தாசை முத்தமிட்டபோது கடித்ததால் அவருக்கு ரத்தம் வந்ததாக ஒரு தகவல் வேகமாக பரவியது.

மேலும் கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் ஹிருத்திக் ரோஷனுடன் டேட்டிங் செல்வதாக கங்கனா தெரிவித்தார். ஆனால் இதனை ஹிருத்திக் மறுத்தார். இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்று பின்னர் முடிவுக்கு வந்தது. இந்த விஷயங்கள் குறித்து கங்கனாவிடம் இது உண்மையா? என நிறைய ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக கங்கனா தனது சமூக வலைதளத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு பிறகு பாவப்பட்ட வீர்தாசை நான் தாக்கினேனா? இது எப்போது நடந்தது? என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இது இணையத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கங்கனா பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரன்பீர்கபூர்- ஆலியாபட்டை பற்றியும் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரன்பீர்- ஆலியா ஜோடி பிரமாண்டமாக ஊரை கூட்டி திருமணம் செய்தாலும் வீட்டில் வேறு வேறு மாடியில் தான் வசிக்கிறார்கள். ஆனால் வெளியுலகிற்கு சேர்ந்து வாழ்வது போல் காட்டிக்கொள்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சமீபத்தில் லண்டன் சென்ற ரன்பீர் மனைவி ஆலியா, மகளை தனியாக விட்டு விட்டு சென்றுள்ளார். பணத்திற்காக திருமணம் செய்தால் இப்படிதான் நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal