இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன்பின்னர் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, மகாநதி, சர்க்கார், அண்ணாத்தே, தசரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் ரசிகர் ஒருவர், இன்று தனது பிறந்தநாள் உங்களின் வாழ்த்துக்கள் எனக்கு வேண்டும். லவ் யூ தலைவி என்று பதிவிட்டு வாழ்த்து வேண்டி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, “லவ் யூ டூ” என்று பதிவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal