விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹரா’ படத்தில் மோகன் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
‘ஹரா’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். மேலும், அரசியல்வாதியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் டீசர் மற்றும் ‘கயா முயா…’ என்ற பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. ‘ஹரா’ படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.