கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இந்த வெப்தொடர்ன் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வெப்தொடரில் தமன்னாவின் படுக்கையறை காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

இது குறித்து தமன்னா கூறியதாவது:- சமீபத்தில் லஸ்ட் ஸ்டேரிஸ் 2-ல் நான் நடித்த காட்சிகள் பேசுபொருளாக மாறியுள்ளது. என்னைப் பொறுத்தவரை ஒரு நடிகையாக ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் ஒரு பயணமாகவே கருதுகிறேன். லஸ்ட் ஸ்டோரிஸ்-2 காட்சிகளை எனது குடும்பத்துடன் பார்த்த போது மிகவும் சிரமப்படுவேன், படபடப்புடன் அசவுகரியமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். மற்றபடி நான் ஒரு கலைஞனாக என்னை நினைத்து அதற்கான வேலையை செய்து மகிழ்ச்சி அடைகிறேன். லஸ்ட் ஸ்டோரிஸ்-2வை ரசிகர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal