தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அசின், அவரது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். இவர் மோகன் ராஜா இயக்கிய எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அசின். இதில் கேரள பெண்ணாக நடித்திருந்த அசினின் நடிப்பு இளைஞர்களின் மனதை கவரும் வகையில் அமைந்திருந்தது. இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் அசினுக்கு அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன.
2005-ம் ஆண்டு தான் அசினுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டு, அந்த ஆண்டு விஜய் ஜோடியாக சிவகாசி, சூர்யாவின் கஜினி, விக்ரமுடன் மஜா, ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே என அந்த ஆண்டு நடிகை அசின் நடிப்பில் வெளிவந்த 4 படங்களுமே அமோக வெற்றியை பெற்று அசினுக்கு அசுர வளர்ச்சியை தந்தன. தமிழ் சினிமாவில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்த்தையும் பெற்றிருந்தார் அசின்.
இதன்பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வரலாறு, விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான போக்கிரி, சூர்யாவுக்கு ஜோடியாக வேல், கமலின் தசாவதாரம் என தமிழில் நடிகை அசின் நடித்த படங்கள் அனைத்தும் சக்கைப்போடு போட்டன. இதன்பின் அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்ததால் நைசாக கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு பாலிவுட் பக்கம் ஒதுங்கிய அவர் அங்கு சல்மான் கான், ஆமீர் கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பான் இந்தியா நடிகை ஆனார்.
இப்படி புகழின் உச்சத்தில் இருந்த அசின் கடந்த 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு கணவருடன் செட்டில் ஆன அசின், சினிமாவை விட்டும் விலகினார். இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு அசின் – ராகுல் சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அரின் என பெயரிட்டுள்ளனர்.
அசின் – ராகுல் சர்மா ஜோடிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அறிந்த அசின் அவரை எச்சரித்தும், அவர் கேட்காததால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளாராம். தற்போது அசின் தனது குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.