Month: October 2024

அதிமுக தலைமைப் பதவி! ஓபிஎஸ் அறிக்கையின் பின்னணி?

‘அ.தி.மு.க.வின் தலைமைப் பதவிக்கு பண்புள்ளவர்கள் வரவேண்டும்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘எம்ஜிஆர், மறைவுக்கு பிறகு,பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, 4…

2026..! சீனியர்களுக்கு கல்தா! பொன்முடி பேச்சின் பின்னணி?

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் சீனியர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் கசிகிறது. தி.மு.க., முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் பொன்முடி. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுக ஆட்சியில் முக்கிய துறைகளின் அமைச்சராக…

மைசூர் ‘முடா’ அலுவலகத்தில் ‘இ.டி.’ ரெய்டு..!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பணமோசடி வழக்கு தொடர்பாக, மைசூரு நகர்புற மேம்பாட்டு ஆணைய (முடா) அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “மைசூருவில்…

சொத்து குவிப்பு வழக்கு! நவ.15க்கு ஒத்தி வைப்பு!

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2006 & 2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை மீது…

பருப்பு கொள்முதலில் ஊழல்? திமுக மீது பாஜக குற்றச்சாட்டு!

‘‘தீபாவளிக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு கொள்முதலில் ரூ.100 கோடி ஊழல் நடந்திருப்பதாக தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றஞ்சாட்டியிருந்தார். ‘இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு’ என அமைச்சர் சக்கரபாணி அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறார் ஏ.என்.எஸ். பிரசாத்! இது…

அதிமுக ஆட்சி அமைக்காது! ஓபிஎஸ் திட்டவட்டம்..!

‘எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. ஆட்சியமைக்க முடியாது’ என ஓ.பன்னீர் செல்வம் எடப்படிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ‘அ.தி.மு.க. ஆட்சி அமைக்க எந்த தியாகத்தையும் செய்யத் தயார்’ என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதே சமயம், ‘அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., டி.டி.வி.,…

அக். 22 முதல் கனமழை! புதிய காற்றழுத்த தாழ்வு!

வங்கக் கடலில் வரும் அக்.22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “வரும் அக்டோபர் 20 ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு…

சப் கலெக்டர் தற்கொலை! பஞ். தலைவர் அதிரடி நீக்கம்!

கேரளா, கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமான நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கேரளாவின் கண்ணனூர் துணை கலெக்டர் நவீன் பாபுவின் பிரிவு உபசார…

ரவுடிகளுக்கு பாடம்! மன்னிப்பு கேட்ட கமிஷனர் அருண்!

‘ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என, கூறிய விவகாரத்தில், மாநில மனித உரிமை கமிஷனில், மன்னிப்பு கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண், ஜூலை 8ல் பொறுப்பேற்றார்.…

சென்னை ‘ரெட் அலர்ட்’! மழை வாய்ப்பு எப்படி..?

“காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. நாளை காலை கரைக்கு அருகில் வருகிறபோது, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், ஏற்கெனவே பெய்த மழை பதிவுகள்…