‘எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. ஆட்சியமைக்க முடியாது’ என ஓ.பன்னீர் செல்வம் எடப்படிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

‘அ.தி.மு.க. ஆட்சி அமைக்க எந்த தியாகத்தையும் செய்யத் தயார்’ என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதே சமயம், ‘அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலாவை இணைக்க வாய்ப்பே இல்லை. சீனியர்கள் யாரும் இணைப்பு குறித்து வலியுறுத்தவில்லை’ எனவும் கூறியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில்தான், ‘‘ துரோகம், தியாகத்தை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவதா?’’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.

‘‘45 சதவீதமாக இருந்த அதிமுகவின் வாக்கு வங்கி இன்று 20 சதவீதமாக குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுக ஆட்சி அமைக்க முடியாது’’ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal