தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சட்டமன்றத்திலேயே உருவக்கேலி செய்தவர்தான் முதல்வர் விஜய். ஆனால், தி.மு.க.வினர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தாராபுரத்தில் த.வெ.க. வேட்பாளர் குறித்து ஸ்டாலின் ஆதங்கத்தைதான் பேசியிருக்கிறார் என மருது அழகுராஜ் கூறியிருக்கிறார். இதனை அக்கட்சியினர் ரீல்ஸாக மாற்றி ஏதோ உலகம் அழியப்போகிறது என்ற நிலைமைக்கு கொண்டுச் சென்றிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் தி.மு.க.வின் கொள்கை பரப்புத் துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில் ‘‘தகரம்…!’’ எனும் தலைப்பில்

‘‘திடகாத்திரமான ஒருவரால் எப்படி இதுபோல அந்தர் பல்டிகளை அடிக்க முடிகிறது என்னும் ஆதங்கத்தை தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.

உடனே அதனை உருவக்கேலி என்கின்றனர். பொது இடத்தில் தொடங்கி புனித மிக்க சட்டப் பேரவை வரை தலையை வெட்டுவது போன்ற அருவருக்கத்தக்க உடல்மொழி கேலிகளை செய்கிற மலிவான மனிதர் விஜய் தான்…

ஆக தங்கத்தைதரம் பார்த்து சொல்லும் தகுதி உறைகல்லுக்கு உண்டே தவிர துருப்பிடித்த தகரத்துக்கு கிடையாது என்பதே உண்மை..!’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

அடுத்ததாக மருது அழகுராஜ், ‘விஜய்க்கு முன்பு இருந்த மாயை தற்போது இல்லை’ என்ற வகையில். ‘‘விலகும் மாயை!’’ எனும் தலைப்பில்,

‘‘தன்னிடம் கை குலுக்க வந்த இளைஞரை அன்று தனது பாதுகாவலர்களை விட்டு அடித்து கீழே தூக்கி எறிந்தவர்தான்…

இன்று தெருத்தெருவாக அலைகிறார்! ‘‘வாங்க டீ குடிக்கலாம்’’ என்கிற அளவுக்கு இறங்கியிருக்கிறார் என்றால் மக்களிடம் மாயை விலகத் தொடங்கிவிட்டது என்பது தானே இதன் பொருள்… என்னநாஞ் சொல்றது’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal