கடந்த சில தினங்களுக்கு முன்புதான், மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்​டத்​துக்கு தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வரவேற்பு தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று ஜி-கே.வாசன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘தவெக கடந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் அளித்த வாக்​குறு​தியை நிறைவேற்​றும் வகை​யில், தற்​போது தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டத்தை தமிழக முதல்​வர் விஜய் தொடங்கி இருப்பது மகிழ்ச்​சிக்​குரியது.

இத்​திட்​டம் சமு​தா​யத்​தில் ஒரு தாய்​மாமனின் உணர்​வுபூர்​வ​மான அன்​பை​யும், ஆதர​வை​யும், நம்​பிக்​கை​யை​யும் பெண்களுக்கு அளிக்​கும் வகை​யில் அமைந்​துள்​ளது. மகளிருக்கு ஒவ்​வொரு குடும்​பத்​தோடும் ஏற்பட இருக்​கின்ற பாசம், பந்​தம், நம்​பிக்கை அதன் அடிப்​படை​யில் ஏற்​படும் நல்​லுறவு வலுப்​படும்.

அதோடு குழந்தை பிறந்த நாள் அன்றே அவர்​களு​டைய எதிர்​காலம் வசந்த கால​மாக மாறு​வதற்கு அடை​யாள​மாக இத்​திட்​டம் திகழும்’’ இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal