மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் இயற்கையாக வந்தது கிடையாது. செயற்கையாக திணிக்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில்தான், தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ், ‘‘ஏரி காத்த ராமர் ஊர் மதுராந்தகத்துக்கு பொறுமை காத்த பரந்தாமன் தானே பொறுத்தமானவர்..!’’ என தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக மதுரு அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில் ‘‘ராமப்பொருத்தம்..!’’ எனும் தலைப்பில்,
‘‘தன்னை
எம்.பி.,
எம்.எல்.ஏ.என வெற்றி பெற வைத்து…
பல வாய்ப்புகளை தந்த கட்சி
ஆட்சிக்கு வரவில்லை என்றதும்…
மக்கள் தந்த
எம்.எல்.ஏ. பதவியை ஒரு மாதத்துக்குள்
ராஜினாமா
செய்துவிட்டு…
ஆட்சியை பிடித்த புதுக் கட்சியிடம் அடகு போயிருப்பவர்
இப்ப அந்த ஆளுங்கட்சியின் சார்பில் மீண்டும் இடைத்தேர்தல் வேட்பாளர் என்றால்…
2021&-2026வரை எம்எல்ஏ வாக இருந்த தனக்கு தனது கட்சி
சீட்டு தரவில்லை என்றாலும் விசுவாசத்தோடு அமைதி காத்த ஒருவர்
இப்ப எதிர்கட்சிக்கு வேட்பாளர்…
ஆம்…
முன்னவர் தவெகவின்
மரகதம் குமரவேல்!
பின்னவர் திமுகவின்
இ.பரந்தாமன்
இப்பச்
சொல்லுங்க…
ஏரி காத்த
ராமர் ஊர்
மதுராந்தகத்துக்கு
பொறுமை காத்த
பரந்தாமன் தானே
பொறுத்தமானவர்..
வாக்களிப்பீர்
உதயசூரியன்.
