கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதன் முறையாக தேசிய கொடி ஏற்றிய நிலையில், அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா முன் வரிசையில் அமர்ந்து ரசித்த புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் இன்று 80வது சுதந்திர தின கொண்டாடட்டம் களைகட்டியுள்ளது. நாட்டு மக்கள் தங்களின் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் சுதந்திர தின கொண்டாட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.முதல்வர் விஜய், முதல் முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றவுள்ளார். கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் முதல்வர் அரியணை ஏறினார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் இவ்வளவு குறுகிய காலத்தில் யாரும் முதல்வர் ஆனது இல்லை என கூறுகின்றனர். அந்த சாதனையை விஜய் படைத்துள்ளார். முதல்வராக பதவி ஏற்ற பின் முதல் சுதந்திர தினத்தை விஜய் கொண்டாடுகிறார். அதன்படி இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ஜோர்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார்.

இந்த நிலையில் முதல்வர் விஜய் முதல் முறையாக கோடையில் தேசியக்கொடி ஏற்றவுள்ள நிலையில் விஜய்யின் பெற்றோர் அருகே த்ரிஷாவுக்கு முதல் வரிசையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது. சுதந்திர தின நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்தான் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக விஜய் முதல்வராக பதவி ஏற்கும்போது நடிகை த்ரிஷாவுக்கு முதல் வரிசையில் இடம் வழங்கப்பட்டது. மேலும் விஜய் பதவி ஏற்கும்போது த்ரிஷா ஆனந்த கண்ணீர் வடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal