பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி ‘வி த லீடர்ஸ்’ எனும் மக்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
பொது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து ஆதரவைத் திரட்டும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை அண்ணாமலை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, நாளை (ஆக.16) மாலை 3 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அண்ணாமலை தலைமையில் பிரம்மாண்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. இதில் மக்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்குமாறு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
