கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பணியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனிடையே தவெக தலைவர் விஜய் 2026-ஆம் ஆண்டு சட்டமனற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார். இந்த நிலையில் அண்மையில் கரூர் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்ப 31 குடும்பங்களை சார்ந்த தலா ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிகான அரசாணை வழங்கினார்.

இதனை எதிர்த்து அன்றைய தினமே சென்னை சூளையை சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ரம், முதலமைச்சர் விஜய் அளித்த அரசாணை தற்காலிகமானது என்று தெரிவித்துது. இருந்தது. இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 31 குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட அரசுப் பணிக்கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக தவெக அரசு மற்றும் அரசு பணி பெற்றவர்களான பிரபாகரன் செல்வகுமார், ஞானாம்பாள் மருதாச்சலமூர்த்தி, ஆனந்த ஜோதி உள்ளிட்டொர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் ஆடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு, ‘‘அரசின் கொள்கை முடிவில் உயர் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும், அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இல்லாத நிலையில் உயர்நீதிமன்றம் எவ்வாறு ரத்து செய்ய முடியும்’’ என வாதிட்டது.

இதனைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தெளிவாக ஏற்கனவே தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது அரசு வேலைகள் எவ்வாறு வழங்க வேண்டும் என்று என எதிர்மனுதாரர் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ‘‘கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிலர் உயிரிழந்து விட்டனர். அவர்களுக்கு அரசு வேலை வழங்குகிறது. அவ்வாறு இருக்கையில் வேலை வழங்கக் கூடாது என்று கூறுவதற்கு நீங்கள் யார்? கரூர் சம்பவம் ஒரு துயர சம்பவம்… அதில் அரசியல் செய்யலாமா?’’ என கேள்வி எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பணிக்கான அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal