கரூர் நெரிசலில் உயி​ரிழப்​பு​கள் தொடர்​பான வழக்​கில், டெல்​லி​யில் செந்​தில் பாலாஜி​யிடம் சிபிஐ அதி​காரி​கள் சுமார் 6 மணி நேரம் நேற்று தீவிர விசா​ரணை நடத்​தினர். அவரிடம் சில ஆதாரங்களை காட்டி துருவி துருவி விசாரணை நடத்தியிருக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!

கடந்த ஆண்டு செப்​.27-ம் தேதி கரூரில் நடை​பெற்ற தமிழக வெற்​றிக் கழகத்​தின் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். தமிழகத்​தையே உலுக்​கிய இந்​தச் சம்​பவம் குறித்து சிபிஐ விசா​ரணை மேற்​கொண்டு வரு​கிறது.

இந்த வழக்​கில் ஏற்​கெனவே தவெக தலை​வர் விஜய் 3 முறை டெல்​லி​யில் சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் ஆஜராகி விளக்​கம் அளித்​தார். இந்த துயர சம்​பவத்​துக்கு திமுக மற்​றும் செந்​தில் பாலாஜி​யின் ஆதர​வாளர்​களே காரணம் என தவெக தரப்​பில் குற்​றம் சாட்​டப்​பட்டு வரு​கிறது.

மேலும், சம்பவம் நடந்த அன்று இரவே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததால், அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. இந்​நிலை​யில், மார்ச் 17-ம் தேதி டெல்லி அலு​வல​கத்​தில் ஆஜராகு​மாறு செந்​தில் பாலாஜிக்கு சிபிஐ சம்​மன் அனுப்பியது.

அதன்படி செந்​தில் பாலாஜி நேற்று முன்​தினம் சென்​னை​யில் இருந்து டெல்லி சென்​றார். நேற்று காலை 11 மணிக்​குத் தொடங்​கிய விசா​ரணை​யில், சிபிஐ அதி​காரி​கள் கரூர் சம்​பவம் குறித்து அவரிடம் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பினர். அப்​போது, விஜய் மற்​றும் தவெக நிர்​வாகி​கள் மீதே குற்​றச்​சாட்டை முன்​வைத்து செந்​தில் பாலாஜி பதில்​களை அளித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசா​ரணை​யின் போது, செந்​தில் பாலாஜி அளித்த விளக்​கங்​கள் அனைத்​தை​யும் சிபிஐ அதி​காரி​கள் வீடியோ​வாக​வும், எழுத்​துப்​பூர்​வ​மாக​வும் பதிவு செய்தனர். மாலை 5 மணி அளவில்​ வி​சா​ரணை நிறைவடைந்​தது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், ‘‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த சில மணித்துளிகளில் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு விரைந்தது, வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களில் செந்தில்பாலாஜி அறக்கட்டளை வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. கூட்டத்திற்குள் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் புகுந்து பிரச்னையை எழுப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தவெக நிர்வாகிகள் முன்வைத்தது குறித்தும் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.

தவெக நிர்வாகிகள் ஒப்படைத்த வீடியோக்களின் உண்மைத்தன்மை குறித்து செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். குறிப்பாக, சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு விரைந்தது எப்படி? அவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடந்திருக்கிறது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பேரணி மற்றும் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக செந்தில் பாலாஜி அறிந்த தகவல்களை வாக்குமூலமாக சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்தனர். சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுவதற்காக செந்தில் பாலாஜி காலையில் வந்த போது அவர் சென்ற கார் சிபிஐ அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பேரணி மற்றும் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக செந்தில் பாலாஜி அறிந்த தகவல்களை வாக்குமூலமாக சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்தனர். சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுவதற்காக செந்தில் பாலாஜி காலையில் வந்த போது அவர் சென்ற கார் சிபிஐ அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், மாலையில் அவரது வாகனம் சிபிஐ அலுவலகத்திற்குள் எடுத்து செல்லப்பட்டு, பின்னர் உள்ளே அமர்ந்தவாறு செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். 6 மணி நேரம் செந்தில் பாலாஜியிடம் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு சம்மன் வழங்கப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal