சிவகங்கை மாவட்டத்திள் உள்ள சட்டமன்றத் (தனி) தொகுதிதான் மானாமதுரை! வைகைக் கரையில் வாழ்ந்து தமிழரின் நாகரீகம் 2600 ஆண்டுகள் பழமையானது ன உலகிற்கு உரக்கச் சொல்லியே கீழடி அமைந்துள்ள தொகுதி மானாமதுரை சட்டமன்றத் தொகுதி. இங்கு நடந்த ஆறுகட்ட அகழாய்வுப் பணிகள் இந்திய வரலாற்றையே மாற்றி போட்டுள்ளனர். திருப்புவனம், இளையான்குடி ஆகிய நகரங்கள் அடங்கிய இந்தத் தொகுதியில் மண்பாண்டத் தொழிலில் 700 குடும்பங்கள் ஈடுபட்டு வருகிறது.
பூவந்தி,வயல் சேரி ,திருப்பாச்சேத்தி, உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் பல நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். வைகையாற்றுப் பாசனத்தை நம்பி இருபத்தைந்தாயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை விளைகின்றன. இளையான்குடியில் குண்டு மிளகாய் நான்காயிரம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது.வைகை கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தமல்லி சோமநாதர் கோவில் சித்திரைத் திருவிழா மதுரைக்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்றது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களமிறங்கிய தமிழரசி 43.91 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சு.நாகராஜன் 36,99 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட தமிழரசி காய்நகர்த்தி வரும் நிலையில், மனாமதுரை தொகுதியில் போட்டியிட பேராசிரியர் ம.சிங்கமுத்து அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார். மானாமதுரை தொகுதியில் போட்டியிட தொடர்ச்சியாக ஏழாவது முறையாக விருப்பமனு கொடுத்திருக்கிறார் பேராசிரியர் ம.சிங்கமுத்து.

இதுபற்றி மானாமதுரை உடன் பிறப்புக்களிடம் பேசினோம். ‘‘சார், பேராசிரியர் ம.சிங்கமுத்து மாவட்ட அமைப்பாளர்ஆதி திராவிட நலக்குழு, முன்னாள் ஒன்றிய (2001) கவுன்சிலர், சிவகங்ககை உள்பட பல்வேறு கட்சிப் பொறுப்புகளில் இருந்து வந்தவர். கள்ளழகர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துணைத் தலைவராகவும், துணை முதல்வராகவும் கடைசியில் கல்லூரி முதல்வர் என 25 ஆண்டு காலங்கள் கல்வித்துறையில் பணியாற்றியிருக்கிறார்.
மூன்று தலைமுறையாக தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த ம.சிங்கமுத்து மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டால், இவரிடம் படித்த மாணவர்களின் வாக்குகளே ஏறத்தாழ பத்தாயிரம் இவருக்கு கிடைக்கும். பேராசிரியராக பணியாற்றிய போதே ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் நல்லப்பெயர் வாங்கியிருக்கிறார். கட்சிக்காக நடந்த அனைத்துப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டிருக்கிறார். ஆதி திராவிடர் அணி சார்பில் நடந்த பல போராட்டங்களிலும் பங்கேற்ற இவர் சிறைக்கும் சென்று வந்திருக்கிறார்.
வழக்கறிஞரான இவரது மகன் எம்.எஸ்.எம். தினேஷ் பாண்டியன் தி.மு.க. வழக்கறிஞர் அணியில் இருக்கிறார். எனவே, பேராசிரியர் ம.சிங்கமுத்துக்கு மானாமதுரை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா?’’ என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் தி.மு.க.வினர்.
