பட்டுக்கோட்டை நீர் நிலை பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண்ணை அள்ளிய ஆளும் கட்சி வாகனங்களை விடுவிக்கக் கோறி திமுக மாவட்ட செயலாளர் டி.எஸ்.பி-யிடம் பேசிய ஆடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது.

பட்டுக்கோட்டை நீர் நிலை பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண்ணை அள்ளிய ஆளும் கட்சி வாகனங்களை விடுவிக்கக் கோறி திமுக எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட செயலாளர் டி.எஸ்.பி-யிடம் பேசிய ஆடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது.

திட்டக்குடி கிராமத்தில் உள்ள குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி 20 அடிக்கு மேல் மண் அள்ளப்பட்டதால், பட்டுக்கோட்டை போலிசார் அந்த வாகனங்களை பரிமுதல் செய்தனர். இதை அறிந்த திமுக மாவட்ட செயலாளர் வண்டிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு தாசில்தார் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் காவல்துறை வாகனங்களின் சாவியை தராததால் டி.எஸ்.பி யிடம் அண்ணாதுரை போனில் பேசியுள்ளார்.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட செயலாளர் அண்ணா துரை பேசியதாவது :

‘‘திட்டக்குடியில் மண் அள்ளியுள்ளனர். தாசில்தார் வந்து நிறுத்த சொல்லியிருக்கிறார். நான் உடனே மணல் அள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். தாசில்தார் அதை ஏற்றுக்கொண்டு சரியென்று போய்விட்டார். எந்த விதிகளும் மீறப்படவில்லை. நம்ம எஸ்.ஐ சொல்கிறார். நீங்கள் சொன்னால்தான் சாவி கொடுப்போம் என்று.

பட்டுக்கோட்டை டி.எஸ்.பி பாலாஜி : ‘‘பிரச்சனை மேல் இடம் வரை சென்றிருக்கிறது. நாங்கள் சாவியை தர இயலாது. 2 அல்லது 3 அடி மண் எடுத்தால் பரவாயில்லை, ஆனால் 25 அடிக்கு மணல் எடுத்து செல்கின்றனர். நாளை இது பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

இந்நிலையில் தாசில்தாரே சொல்லிவிட்டார். நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால் நல்லது. இல்லை என்றால் ஏற்றுகொள்ள வேண்டாம்’’ என்று அண்ணாதுரை பேசியுள்ளார்.

இந்நிலையில் இதற்கு தைரியமாக பதிலளித்த டி.எஸ்.பி பாலாஜி, ‘‘முடிந்ததை பார்த்துகொள்ளுங்கள். நாங்கள் வழக்கு போடுவோம். நீங்கள் சொல்வதை கேட்ட முடியாது ’’ என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் இந்த ஆடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal