‘தி.மு.க.வின் அடுத்த தலைவராக கனிமொழி கருணாநிதி வரவேண்டும் என்று தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் முடிவு செய்து விட்டார்கள்’ என அண்ணாமலை பேசியிருப்பதுதான் தி.மு.க.வில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது!

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, அதிரடியான கருத்துக்களை அவ்வவப் போது தெரிவித்து வருகிறார். அமித் ஷா வந்து சென்ற பிறகு, அ.தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்தார். இதனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொள்ளவும் தயங்க மாட்டோம்’ என்றார்.

இந்த நிலையில்தான், ‘தி.மு.க.வின் அடுத்த தலைவராக வருவதற்கு கனிமொழி கருணாநிதி தயாராகிவிட்டார். தி.மு.க. என்ற கட்சி கனிமொழியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க.வில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் எல்லாம் கனிமொழியை தலைவராக்க முடிவு செய்துவிட்டார்கள். காரணம், தலைமை மீது கடுமையான அதிருப்தி! இதனால், முதல் அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தால், உருட்டி பிரட்டி உதயநிதியை முன்னிறுத்தி வருகிறார். இதைத்தான் நேற்றைய தினம் அமித் ஷாவும் பேசினார்’’ என்றார்.

தி.மு.க.வின் அடுத்த தலைவர் பற்றி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசிய விவகாரம்தான் அறிவாலயத்தில் அனலடித்துக் கொண்டிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal